அல்லு அர்ஜுன் - அட்லி படத்தின் அறிவிப்பு எப்போது?
ADDED : 497 days ago
ஷாருக்கான் நடிப்பில் ஜவான் என்ற படத்தை இயக்கிய அட்லி அடுத்தபடியாக தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் ஒரு படத்தை இயக்கப் போகிறார். இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் குட் பேட் அக்லி மற்றும் அல்லு அர்ஜுனின் புஷ்பா- 2 படங்களை தயாரித்து வரும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தை இயக்குவதற்காக இந்திய சினிமாவில் இதுவரை யாரும் வாங்காத ஒரு பெரிய சம்பளத்தை அட்லி வாங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில், புஷ்பா-2 படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டி உள்ளதால் வெகு விரைவிலேயே அல்லு அர்ஜுன், அட்லி இணையும் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது. தற்போது அப்படத்தின் ஆரம்ப கட்டப் பணிகளை அட்லி தொடங்கி விட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.