உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக மமிதா பைஜூ

பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக மமிதா பைஜூ

இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் 'லவ் டூடே' படத்தில் கதாநாயகனாக நடித்து வெற்றி பெற்றார். தற்போது எல்.ஐ.சி , டிராகன் ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இதையடுத்து பிரபல தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் பிரதீப் ரங்கநாதன் புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இயக்குனர் சுதா கொங்கராவின் உதவி இயக்குநர் கீர்த்திஸ்வரன் இப்படத்தை இயக்குகிறாராம். இதில் கதாநாயகியாக மமிதா பைஜூ நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !