கிராமத்து ஸ்டைலில் தீபிகா போட்டோஷூட்
ADDED : 494 days ago
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் வீஜே தீபிகா. அந்த சீரியலில் சரவண விக்ரமுடனான இவரது காம்போ சூப்பராக வொர்க் அவுட் ஆனது. தொடர்ந்து இருவரும் சோஷியல் மீடியாக்களில் போட்டோஷூட், ரீல்ஸ் வெளியிட்டு டிரெண்டிங்கில் இடம்பிடித்து வந்தனர். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முடிந்த பிறகு வீஜே தீபிகாவுக்கு வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. எனினும், சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வரும் தீபிகா, தற்போது கிராமத்து ஸ்டைலில் போட்டோஷூட் எடுத்து வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் வைரலாகி லைக்ஸ் குவித்து வருகிறது.