உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / புஷ்பா 2 படத்தின் இரண்டாவது பாடல் 6 மொழிகளில் வெளியானது

புஷ்பா 2 படத்தின் இரண்டாவது பாடல் 6 மொழிகளில் வெளியானது

அல்லு அர்ஜுன், ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள புஷ்பா-2 படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதி கட்டப்பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்தில் இடம் பெற்றுள்ள புஷ்பா புஷ்பா என்ற பாடல் வெளியிடப்பட்ட நிலையில், தற்போது சூடான என்ற ஒரு கப்புள் பாடல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, வங்காளம் என ஆறு மொழிகளில் வெளியாகியுள்ள இந்த பாடலை ஸ்ரேயா கோஷல் பாடியிருக்கிறார். இப்பாடலை ராஷ்மிகா மந்தனா தன்னுடைய சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். வருகிற ஆகஸ்ட் 15ம் தேதி திரைக்கு வரும் இந்த படத்தில் அல்லு அர்ஜுன் ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில் என பலர் நடிக்க, தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !