கமலின் தக்லைப் படத்தில் மாஸ் குத்து பாடல்
ADDED : 507 days ago
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, ஐஸ்வர்யா லட்சுமி, நாசர் உள்ளிட்ட பலர் நடித்து வரும் படம் தக்லைப். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்திற்கு ரவிச்சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். இதன் படப்பிடிப்பு சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது சென்னையில் போடப்பட்டுள்ள செட்டில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த செட்டில் கமல்ஹாசன், சிம்பு ஆகிய இருவரும் இடம்பெறும் ஒரு மாஸான குத்து பாடல் படமாக்கப்பட உள்ளது. இதில் கமலும், சிம்புவும் போட்டி போட்டு நடனமாடும் சூழலில் படமாக்கப்பட இருப்பதாக தக்லைப் பட வட்டாரம் தெரிவிக்கிறது.