ஜூலையில் திரைக்கு வரும் பாலாவின் வணங்கான்
ADDED : 493 days ago
2018ம் ஆண்டு நாச்சியார் படத்தை இயக்கிய பாலா, அதையடுத்து துருவ் விக்ரம் நடிப்பில் வர்மா என்ற படத்தை இயக்கினார். அந்த படம் கைவிடப்பட்டது. இந்த நிலையில் சூர்யாவை வைத்து வணங்கான் படத்தை தொடங்கினார். ஆனால் ஒரு மாத படப்பிடிப்புக்கு பிறகு சூர்யா அந்த படத்தில் இருந்து விலகினார். அதையடுத்து அருண் விஜய் நடிப்பில் அப்படத்தை இயக்கி முடித்திருக்கிறார் பாலா. தற்போது அப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதி கட்டப்பணிகள் நடைபெற்று வரும் நிலையில், வணங்கான் படத்தை ஜூலை மாதம் வெளியிடுவதற்கு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இதே ஜூலை மாதத்தில் இந்தியன் 2 படமும் திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் இரண்டும் ஒரே தேதியில் ரிலீஸாகுமா அல்லது வெவ்வேறு தேதிகளில் ரிலீஸ் ஆகுமா என்பது இனி தான் தெரியவரும்.