உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / லக்கி பாஸ்கர் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு!

லக்கி பாஸ்கர் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு!


வாத்தி பட இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் துல்கர் சல்மான் 'லக்கி பாஸ்கர்' என்கிற படத்தில் நடித்துள்ளார். இதில் அவருக்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடிக்கின்றார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்தை சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிக்கின்றனர்.

பைனான்ஸ் மாபியா கதை களத்தை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவு பெற்று இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இத்திரைப்படம் வருகின்ற செப்டம்பர் 27ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !