உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சூர்யா 44வது படத்தில் இணையும் ஐந்து தொழில் நுட்ப கலைஞர்கள்!

சூர்யா 44வது படத்தில் இணையும் ஐந்து தொழில் நுட்ப கலைஞர்கள்!


சிறுத்தை சிவா இயக்கியுள்ள கங்குவா என்ற படத்தில் நடித்து முடித்துள்ள சூர்யா, அடுத்தபடியாக கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் தனது 44வது படத்தில் நடிக்கப் போகிறார். இந்த படம் குறித்த அறிவிப்பு ஏற்கனவே வெளியான நிலையில், தற்போது நடிகர் நடிகைகள், டெக்னீசியன்கள் தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் சூர்யா 44வது படத்தில் இணைந்துள்ள ஐந்து டெக்னீசியன்களின் பெயர்களை தற்போது படக் குழு அறிவித்திருக்கிறது. அந்த வகையில், இப்படத்தின் கலை இயக்குனராக ஜாக்சன் என்பவர் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். காஸ்டியூம் டிசைனராக பிரவீன் ராஜாவும், ஸ்டண்ட் இயக்குனராக ஜெயிக்காவும், படத்தொகுப்பாளராக சபிக் முகமது அலியும், ஒளிப்பதிவாளராக ஸ்ரேயா கிருஷ்ணாவும் இணைந்துள்ளார்கள். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இதையடுத்து இப்படத்தில் நடிக்கும் ஹீரோயின் உள்ளிட்ட மற்ற நடிகர், நடிகைகள் பட்டியல் விரைவில் வெளியாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !