மீண்டும் அஜித் - சிவா படத்தை தயாரிக்கும் சத்யஜோதி பிலிம்ஸ்
ADDED : 526 days ago
மகிழ்திருமேனி இயக்கும் விடாமுயற்சி, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் குட் பேட் அக்லி போன்ற படங்களில் நடித்து வருகிறார் அஜித் குமார். இவற்றில் விடாமுயற்சி படம் பாதியில் நிற்கிறது. குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பொங்கலுக்கு இந்தப்படம் திரைக்கு வருகிறது.
இந்த இரண்டு படங்களையும் முடித்துவிட்டு அடுத்தபடியாக ஏற்கனவே தன்னை வைத்து வீரம், விவேகம், வேதாளம், விஸ்வாசம் போன்ற 4 படங்களை அடுத்தடுத்து இயக்கிய சிவா இயக்கும் படத்தில் நடிக்கப் போகிறார் அஜித். அவர்கள் ஐந்தாவது முறையாக இணையும் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு முன்பு அஜித்தை கொண்டு சிவா இயக்கிய விவேகம், விஸ்வாசம் ஆகிய இரண்டு படங்களையும் இதே நிறுவனம் தான் தயாரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.