உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக் : ஒரே ஆண்டில் 8 படங்களில் ஜோடியாக நடித்த எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா

பிளாஷ்பேக் : ஒரே ஆண்டில் 8 படங்களில் ஜோடியாக நடித்த எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஜோடியை வெள்ளி விழா ஜோடி என்பார்கள். இருவரும் இணைந்து நடித்த படங்கள் பெரும்பாலும் வெற்றி பெறும். எம்.ஜி.ஆர் ஜோடியாக அதிகம் நடித்த ஹீரோயினும் ஜெயலலிதா தான்.

1968ம் வருடம் எம்.ஜி.ஆர் நடித்த ரகசிய போலீஸ் 115, தேர்திருவிழா, குடியிருந்த கோவில், கண்ணன் என் காதலன், புதிய பூமி, ஒளி விளக்கு, காதல் வாகனம், கணவன் ஆகிய படங்கள் வெளிவந்தது. இந்த படங்கள் அனைத்திலும் ஜெயலலிதாதான் அவருக்கு ஜோடியாக நடித்தார். இதில் காதல் வாகனம், தேர்திருவிழா படங்கள் தோல்வி அடைந்தது. குடியிருந்த கோவில், ஒளிவிளக்கு படங்கள் வெள்ளி விழா கொண்டாடியது. மற்ற படங்கள் 100 நாள் படங்கள் ஆனது.

1965ம் ஆண்டு பி.ஆர்.பந்துலு இயக்கத்தில் உருவான 'ஆயிரத்தில் ஒருவன்' படத்தில்தான் எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் இணைந்து நடிக்கத் தொடங்கினர். 1968-ம் ஆண்டு முதல் சிவாஜியுடனும் இணைந்து நடிக்கத் தொடங்கினார் ஜெயலலிதா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !