கேதார்நாத், பத்ரிநாத்தில் ரஜினிகாந்த் தரிசனம்
ADDED : 492 days ago
'வேட்டையன்' படப்பிடிப்பை முடித்த பின் நடிகர் ரஜினிகாந்த் அபுதாபிக்குச் சென்று சில நாட்கள் தங்கியிருந்து ஓய்வெடுத்தார். அங்கிருந்து சென்னை திரும்பிய ரஜினிகாந்த், பின்னர் இமயமலை பயணத்திற்கு புறப்பட்டுச் சென்றார்.
அங்கு கேதார்நாத், பத்ரிநாத் உள்ளிட்ட இடங்களுக்குச் சென்று தரிசனம் செய்துள்ளார். அந்த வீடியோக்களும், புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் பரவியுள்ளன. தேர்தல் முடிவுகள் வரும் வரை ரஜினி அங்கேயே இருப்பார் எனத் தெரிகிறது. அதற்குப் பிறகுதான் அவர் சென்னை திரும்புவதாகத் தகவல்.
இங்கு வந்த பின்பு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'கூலி' படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளார்.