உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சில்லுனு ஒரு காதல் இரண்டாம் பாகத்தில் கவின்

சில்லுனு ஒரு காதல் இரண்டாம் பாகத்தில் கவின்

கடந்த 2006ம் ஆண்டில் ஒபிலி என். கிருஷ்ணன் இயக்கத்தில் சூர்யா, ஜோதிகா, பூமிகா சாவ்லா ஆகியோர் இணைந்து நடித்து வெளிவந்த திரைப்படம் 'சில்லுனு ஒரு காதல்'. இப்படம் இன்னும் இளைஞர்களைக் கவர்ந்துள்ளது. ஏ.ஆர். ரஹ்மான் இசையில் வெளிவந்த அத்தனை பாடல்களும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஒபிலி என்.கிருஷ்ணா புதிய படம் ஒன்று இயக்கவுள்ளதாக அறிவித்தனர். தற்போது கிடைத்த புதிய தகவல் படி, பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படம் சில்லுனு ஒரு காதல் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகிறது என்கிறார்கள். இதில் கதாநாயகனாக கவின் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !