உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இத்தாலி சுற்றுலாவில் சித்தார்த், அதிதி காதல் ஜோடி

இத்தாலி சுற்றுலாவில் சித்தார்த், அதிதி காதல் ஜோடி


நடிகர் சித்தார்த், நடிகை அதிதி ராவ் ஹைதரி இருவருக்கும் சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இந்த வருடத்தின் கடைசியில் இருவரும் திருமணம் செய்து கொள்ள உள்ளார்கள்.

இந்த காதல் ஜோடி தற்போது இத்தாலியில் உள்ள டஸ்கன் நகரில் சுற்றுலாவில் உள்ளது. அங்கிருந்து சில புகைப்படங்களை அதிதி பதிவிட்டுள்ளார். சித்தார்த் நடித்து அடுத்து 'இந்தியன் 2' படம் வெளிவர உள்ளது. நேற்று அப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதைத் தவிர்த்துவிட்டு சித்தார்த் சுற்றுலா சென்றது ஆச்சரியமாக உள்ளது. இத்தனைக்கும் இயக்குனர் ஷங்கர் தான் அவரை 'பாய்ஸ்' படத்தில் கதாநாயகனாக அறிமுகப்படுத்தி இருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !