மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்த ஆதி- நிக்கி கல்ராணி!
ADDED : 537 days ago
தமிழில் மிருகம், ஈரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் ஆதி. இவரும் டார்லிங் உள்ளிட்ட பல படங்கள் நடித்த நிக்கி கல்ராணியும் கடந்த 2022ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். இந்நிலையில் இவர்கள் இருவரும் நேற்று இரவு மதுரையில் உள்ள மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார்கள். அப்போது கோயில் வளாகத்துக்குள் வந்த அவர்களை கண்டதும் அங்கு கூடிய பக்தர்கள் அடையாளம் கண்டு கொண்டு அவர்களுடன் போட்டிப்போட்டு செல்பி எடுத்து மகிழ்ந்துள்ளார்கள்.
அதையடுத்து அங்கு நின்ற காவலர்கள் ஆதி - நிக்கி கல்ராணி ஆகிய இருவரையும் பாதுகாப்புடன் கோயிலுக்குள் அழைத்து சென்று சாமி தரிசனம் செய்ய வைத்திருக்கிறார்கள். அப்போது அவர்களுக்கு கோயில் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டுள்ளது.