உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சிவகார்த்திகேயனுக்கு மூன்றாவதாக ஆண் குழந்தை பிறந்தது

சிவகார்த்திகேயனுக்கு மூன்றாவதாக ஆண் குழந்தை பிறந்தது

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார் சிவகார்த்திகேயன். ‛அமரன்' படத்தில் நடித்து முடித்துள்ளார். தற்போது ஏஆர் முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இதுதவிர இரண்டு படங்கள் அவர் கைவசம் உள்ளன.

சிவகார்த்திகேயன் - ஆர்த்தி தம்பதிக்கு ஏற்கனவே ஆராதனா என்ற மகளும், குகன் என்ற மகனும் உள்ளனர். ஆர்த்தி மூன்றாவது முறையாக கர்ப்பம் ஆனார். சமீபத்தில் இந்த விஷயம் வெளியில் தெரிந்த நிலையில் சிவகார்த்திகேயன் - ஆர்த்திக்கு நேற்று மூன்றாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இதுதொடர்பாக சிவகார்த்திகேயன் வெளியிட்ட பதிவில், ‛‛எங்களுக்கு நேற்று இரவு (ஜூன் 2) ஆண் குழந்தை பிறந்திருக்கிறான் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம். ஆர்த்தியும், குழந்தையும் நலம். ஆராதனா, குகனிற்கு நீங்கள் தந்த அன்பு, ஆசியை எங்களது மூன்றாவது குழந்தைக்கும் தர வேண்டுகிறேன், நன்றி'' என குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !