உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பவன் கல்யாணுக்கு சினிமா பிரபலங்கள் வாழ்த்து

பவன் கல்யாணுக்கு சினிமா பிரபலங்கள் வாழ்த்து

தெலுங்கில் முன்னணி நடிகராக இருப்பவர் பவன் கல்யாண். 2014ம் ஆண்டு ஜனசேனா என்ற கட்சியை ஆரம்பித்தார். அப்போது நடந்த தேர்தலில் பாஜக, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகளுக்கு ஆதரவளித்தார். ஆனால், தேர்தலில் போட்டியிடவில்லை. அவர்களுக்காக பிரச்சாரம் மட்டும் செய்தார்.

2019ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் அக்கட்சி போட்டியிட்டது. அப்போது ஒரே ஒரு தொகுதியில் அவர்களது வேட்பாளர் வெற்றி பெற்றார். ஆனால், அவரும் பின்னர் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். அதனால், ஜனசேனா கட்சிக்கு எந்த உறுப்பினரும் இல்லாமல் போனது.

நடந்து முடிந்த ஆந்திர மாநில தேர்தலில் தெலுங்கு தேசம், பாஜக ஆகிய கட்சிகளுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தது. சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்ட 21 இடங்களிலும், பார்லிமென்ட்டிற்காகப் போட்டியிட்ட 2 இடங்களிலும் வெற்றி பெற்றது.

பவன் கல்யாண், பித்தாபுரம் தொகுதியில் போட்டியிட்டு 1,34,934 வாக்குகள் பெற்று தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஒய்எஸ்ஆர் கட்சி வேட்பாளர் வங்க கீதாவை விட 70,279 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

கட்சி ஆரம்பித்து 10 ஆண்டுகளுக்குப் பிறகு அக்கட்சி குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றுள்ளது. அதனால், பவன் கல்யாணுக்கு தெலுங்கு சினிமா பிரபலங்கள் பலரும், தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !