உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / டிரெயின் படப்பிடிப்பு நிறைவு

டிரெயின் படப்பிடிப்பு நிறைவு

முதல்முறையாக தயாரிப்பாளர் தாணு தயாரிப்பில் மிஷ்கின், விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் 'டிரெயின்'. இதில் ஜெயராம், நாசர், டிம்பிள் ஹயாதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதற்காக கடந்த பல மாதங்களாக சென்னையில் டிரெயின் அரங்கம் அமைத்து படப்பிடிப்பு நடத்தி வந்தனர். முழுக்க ஒரு ரயிலில் நடக்கும் கதையாக உருவாகி வருகிறது. கடந்த பல மாதங்களாக இதன் படப்பிடிப்பு நடந்து வந்த சூழலில் தற்போது படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்துள்ளது. வருகின்ற நாட்களில் டப்பிங் உள்ளிட்ட மற்ற பணிகள் தொடங்க உள்ளன. டிரெயின் படத்திற்கு முன்பாக ஆண்ட்ரியாவை வைத்து மிஷ்கின் இயக்கி முடித்துள்ள ‛பிசாசு 2' படம் இன்னும் ரிலீஸ் ஆகாமல் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !