'கல்கி 2898 ஏடி' படத்தில் 12 நிமிடங்களுக்கு மட்டுமே கமல்ஹாசன்
ADDED : 495 days ago
நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், தீபிகா படுகோனே, அமிதாப்பச்சன் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கல்கி 2898 எடி'. இப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் கமல்ஹாசன் நடித்துள்ளார். அதாவது, நீட்டிக்கப்பட்ட சிறப்புத் தோற்றம்.
கமல்ஹாசன் சம்பந்தப்பட்ட காட்சிகள் இப்படத்தின் கிளைமாக்சுக்கு முன்பாகத்தான் வருமாம். அதன் பிறகு இரண்டாவது பாகத்தில் அவருடைய காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் உண்டு என்கிறது டோலிவுட் வட்டாரம்.
ஜுன் 27ம் தேதி வெளியாக உள்ள இப்படத்தின் டிரைலர் வெளியீடு மும்பையில் ஜுன் 10ம் தேதி நடைபெற உள்ளது. இப்படத்தின் முக்கிய நிகழ்வுகளில் கமல்ஹாசன் கலந்து கொள்கிறாராம்.
இப்படத்தை அடுத்து கமல்ஹாசன் நடித்துள்ள 'இந்தியன் 2' படம் ஜுலை 12ம் தேதி வெளியாக உள்ளது.