உடல் எடையை அதிரடியாக குறைத்த அறந்தாங்கி நிஷா
ADDED : 499 days ago
கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் நகைச்சுவை கலைஞராக அறிமுகமானவர் அறந்தாங்கி நிஷா. இன்று சினிமா மற்றும் சின்னத்திரையில் நடிகை, தொகுப்பாளினி என பல்வேறு அவதாரங்கள் எடுத்து அசத்தி வருகிறார். தற்போது மாடலிங்கில் இறங்கி விதவிதமான போட்டோஷூட்களையும் வெளியிட்டு வரும் அவர், அதற்காக உடல் எடையை குறைக்கும் முயற்சியிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். அந்த வகையில் அறந்தாங்கி நிஷா 50 நாட்களில் 14 கிலோ வரை எடையை குறைத்து பிட்டாக மாறியிருக்கிறார். ஒல்லியாக மாறியுள்ள அறந்தாங்கி நிஷாவை பார்க்கும் ரசிகர்கள் 'ஏதும் ஹீரோயின் ஆகும் முயற்சியா?' என ஜாலியாக அவரை கிண்டலடித்து வருகின்றனர்.