எதிர்நீச்சல் சீரியல் கடைசிநாள் புகைப்படங்கள் வைரல்
ADDED : 490 days ago
சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற தொடர் ‛எதிர்நீச்சல்'. திருச்செல்வம் இயக்கும் இந்த தொடரில் கனிகா, வேல ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் நடித்தனர். இந்த தொடர் விரைவில் முடிவுக்கு வரவுள்ளது. இதை நினைத்து அதில் நடித்து வரும் நடிகர்கள், ரசிகர்கள் என அனைவருமே சோகமடைந்துள்ளனர். அதுதொடர்பான போட்டோக்களையும் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்கள். இந்நிலையில், இந்த சீரியலின் பரபரப்பான கிளைமாக்ஸ் காட்சி அண்மையில் நடந்து முடிந்துள்ளது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.