விஜய் சேதுபதியின் மகாராஜா படத்தின் சிங்கிள் பாடல் வெளியானது!
ADDED : 517 days ago
நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள 50வது படம் மகாராஜா. இந்த படம் வருகிற 14ம் தேதி திரைக்கு வருகிறது. சமீபத்தில் துபாயில் உள்ள புர்ஜி கலிபா என்ற உயர்ந்த கட்டடத்தில் இந்த படம் குறித்த விளம்பரம் செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது மகாராஜா படத்தில் இடம்பெற்றுள்ள தாயே தாயே என்று தொடங்கும் சிங்கிள் பாடல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அஜனீஸ் லோக்நாத் இசையில், வைரமுத்து எழுதிய இந்த பாடலை சித் ஸ்ரீராம் பாடி இருக்கிறார். அப்பா - மகள் சம்பந்தப்பட்ட இந்த சென்டிமென்ட் பாடல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.