உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / லாரன்ஸின் காஞ்சனா-4 படத்தில் நாயகியாக நடிக்கும் மிருணாள் தாக்கூர்!

லாரன்ஸின் காஞ்சனா-4 படத்தில் நாயகியாக நடிக்கும் மிருணாள் தாக்கூர்!


லாரன்ஸ் இயக்கி நடித்த காஞ்சனா படத்தில் நாயகியாக ராய் லட்சுமி நடித்த நிலையில், காஞ்சனா இரண்டாம் பாகத்தில் டாப்ஸி, நித்யா மேனன் நடித்தார்கள். அதையடுத்து காஞ்சனா மூன்றாம் பாகத்தில் வேதிகா- ஓவியா நடித்திருந்தனர். தற்போது காஞ்சனா நான்காம் பாகத்தை இயக்க தயாராகி கொண்டிருக்கிறார் லாரன்ஸ்.

இந்நிலையில் இப்படத்தில் சீதா ராமம் படத்தில் நடித்த மிருணாள் தாக்கூர் நாயகியாக நடிப்பதாக ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. மேலும், தற்போது இப்படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் டெக்னீஷியன்கள் தேர்வில் ஈடுபட்டுள்ள ராகவா லாரன்ஸ், செப்டம்பர் மாதம் படப்பிடிப்பை தொடங்கி அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் காஞ்சனா-4 படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !