பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன்!
ADDED : 565 days ago
'ஓ மை கடவுளே' பட இயக்குனர் அஸ்வந்த் மாரிமுத்துவின் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் 'டிராகன்' என்கிற படத்தில் ஹீரோவாக நடித்து வருகின்றார். ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைக்கின்றார்.
இப்படத்தில் கே.எஸ். ரவிக்குமார், மிஷ்கின், வி.ஜே. சித்து மற்றும் ஹர்ஷத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சமீபத்தில் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்தது. இதுவரை இதில் கதாநாயகியாக யாரும் ஒப்பந்தம் ஆகவில்லை.
இந்த நிலையில் இப்போது இந்த படத்தில் கதாநாயகியாக நடிகை அனுபமா பரமேஸ்வரன் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. இவர் பிஸியாக மலையாளம் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் நடித்து வருகின்றார். தமிழில் கொடி, சைரன் ஆகிய மொழி படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.