உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கோலிவுட்டில் நடந்த மூன்று திருமணங்கள்

கோலிவுட்டில் நடந்த மூன்று திருமணங்கள்

தமிழ் சினிமாவில் இந்த வாரம் திருமண வாரம் என்றே சொல்லலாம். நடிகரும் இசையமைப்பாளருமான பிரேம்ஜி அமரன் - இந்து திருமணம் நேற்று(ஜூன் 9) திருத்தணியில் நடைபெற்றது. நடிகர் சார்லியின் மகன் அஜய் தங்கசாமி - பெர்மீசியா டெமி ஆகியோருக்கு நேற்று காலை சென்னை சாந்தோம் சர்ச்சில் திருமணம் நடந்தது. நடிகர் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா, நடிகர் தம்பி ராமையா மகன் உமாபதி ஆகியோருக்கு இன்று(ஜூன் 10) காலை சென்னை, கெருகம்பாக்கத்தில் உள்ள அர்ஜுனுக்குச் சொந்தமான ஆஞ்சநேயர் கோவிலில் திருமணம் நடைபெற்றது.

சார்லி மகனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று மாலை நடந்து முடிந்தது. அதில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். பிரேம்ஜி - இந்து, உமாபதி - ஐஸ்வர்யா ஆகியோரது திருமண வரவேற்பு நிகழ்ச்சி விரைவில் நடைபெற உள்ளது. ஐஸ்வர்யா - உமாபதியின் திருமண வரவேற்பு ஜூன் 14ல் நடக்கிறது.

அடுத்து நடிகை வரலட்சுமி சரத்குமாருக்குத் திருமணம் நடைபெற உள்ளது. அடுத்தடுத்த திருமண வைபவங்களால் கோலிவுட்டில் கல்யாணக் களை ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !