ஜூலை 26க்கு தள்ளிப்போன ‛ராயன்'
ADDED : 495 days ago
தனுஷ் இயக்கி, நடித்துள்ள படம் ‛ராயன்'. இது தனுஷின் 50வது படமாகும். சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன் ஆகியோரும் முதன்மை வேடத்தில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். வட சென்னை பின்னணியில் ஆக் ஷன் கலந்த படமாக தயாராகி உள்ளது. படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடக்கின்றன. இம்மாதம் ஜூன் 13ல் படம் ரிலீஸ் என முன்பு அறிவித்தனர். ஆனால் பட பணிகள் முடியாததால் ரிலீஸ் தள்ளிப்போகும் என தகவல் வந்தது. இப்போது ஜூலை 26க்கு ரிலீஸை தள்ளி வைத்து புதிய போஸ்டர் உடன் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் இந்தப்படம் வெளியாகிறது.