மேலும் செய்திகள்
பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார்
451 days ago
ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ்
451 days ago
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து நேற்று பள்ளிகள் அனைத்தையும் திறந்துவிட்டார்கள். இன்னும் ஓரிரு வாரங்களுக்கு பெற்றோர்கள் குடும்ப வேலைகளில் பிஸியாக இருப்பார்கள். அவர்களுக்கு சினிமா பார்க்க நேரம் கிடைக்குமா என்பதும் சந்தேகம்தான். போதாக்குறைக்கு நிறைய முகூர்த்த நாட்களும் அடுத்தடுத்து வருகிறது. எனவே, இன்னும் சில வாரங்களுக்கு புதிய படங்களுக்கான வசூல் எதிர்பார்த்த அளவில் இருக்க வாய்ப்பில்லை.
இந்த வாரம் ஜூன் 14ம் தேதி வெள்ளிக்கிழமை விஜய் சேதுபதியின் 50வது படமான 'மகாராஜா' படம் வருகிறது. போட்டிக்கு முக்கிய எதிரிகள் என யாரையும் சொல்ல முடியாதபடி ஓரிரு படங்கள் மட்டுமே இந்த வாரம் வெளியாகும் எனத் தெரிகிறது.
நேற்று திருமணமான உமாபதி கதாநாயகனாக நடித்துள்ள 'பித்தல மாத்தி' படம் ஜூன் 14 வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போதைக்கு இந்த இரண்டு படங்கள்தான் அன்றைய தினம் வெளியாக உள்ளன. பெரிய போட்டி எதுவும் இல்லாத காரணத்தால் 'மகாராஜா' படத்திற்கு வரவேற்பு கிடைக்க வாய்ப்புள்ளது.
அதனால்தான், படம் நன்றாக இருக்கிறது என இப்போதே படம் பற்றி ஒரு பில்ட்-அப்பை சமூக வலைத்தளங்களில் பரவ விட்டுள்ளார்கள்.
451 days ago
451 days ago