மேலும் செய்திகள்
பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார்
451 days ago
ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ்
451 days ago
கன்னடத் திரையுலகத்தில் 'சேலஞ்சிங் ஸ்டார்' என அழைக்கப்படுபவர் தர்ஷன். மைசூரில் உள்ள அவரது பண்ணை இல்லத்தில் கர்நாடக போலீசார் அவரைக் கைது செய்துள்ளனர்.
சித்ரதுர்காவைச் சேர்ந்து ரேணுகா சுவாமி என்பவர் கொல்லப்பட்ட வழக்கில் தர்ஷன் கைது செய்யப்பட்டுள்ளாராம். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 10 பேர் தர்ஷனுடன் சேர்த்து கைதாகி உள்ளனர்.
தர்ஷனுக்கு நெருக்கமான நடிகை பவித்ரா கவுடாவுக்கு ரேணுகா சுவாமி தொடர்ந்து தரக்குறைவான கமெண்ட்டுகள், சம்பந்தமில்லாத மெசேஜ்கள் ஆகியவற்றை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். மைசூரில் உள்ள காமாட்சி பல்யா என்ற இடத்தில் ரேணுகா சுவாமி இறந்து கிடந்துள்ளார். முதலில் அதை தற்கொலை என நினைத்துள்ளார்கள். ஆனால், விசாரணையில் அவர் கொல்லப்பட்டதாகத் தெரிய வந்துள்ளது.
தர்ஷன் ஏற்கெனவே திருமணமானவர். அவருக்கும் நடிகை பவித்ரா கவுடாவுக்கும் இடையே தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. தர்ஷன் கைது கன்னடத் திரையுலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
451 days ago
451 days ago