கேப்டன் மில்லருக்கு லண்டனில் கவுரவம்
ADDED : 488 days ago
ராக்கி, சாணிக்காகிதம் படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரின் 3வது படம் 'கேப்டன் மில்லர்'. தனுஷ், பிரியங்கா அருள் மோகன், சிவராஜ்குமார், சந்தீப் கிஷன் நடித்தனர். சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் தியாகராஜன் தயாரித்திருந்தார்.
இந்த படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. ஆனாலும் நல்ல வசூலை கொடுத்ததாக தயாரிப்பாளரே கூறியிருந்தார். இந்த நிலையில் இந்த படம் 10வது லண்டன் தேசிய விருது வழங்கும் விழாவில் 'சிறந்த வெளிநாட்டுத் திரைப்படம்' என்ற பிரிவில் திரையிட பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதனை தயாரிப்பாளர் அறிவித்துள்ளார். இந்த படத்தை இயக்கிய அருண் மாதேஸ்வரன் தற்போது தனுஷை வைத்து இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்று படத்தை இயக்கி வருகிறார்.