உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சினிமாவில் இருந்து விலகினார் எவாஞ்சலின்

சினிமாவில் இருந்து விலகினார் எவாஞ்சலின்

தி ஹர்ட் லாக்கர், ரீல் ஸ்டீல், தி ஹோபிட் உட்பட பல படங்களில் நடித்தவர் எவாஞ்சலின் லில்லி. மார்வெல் படங்களான ஆன்ட்மேன், ஆன்ட்மேன் : அண்ட் தி வாஸ்ப், ஆன்ட்-மேன் அண்ட் த வாஸ்ப்: அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம், குவாண்டுமேனியா ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் உலகம் முழுக பிரபலமானார். 44 வயதான எவாஞ்சலின் சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியட்டுள்ள பதிவில் “இப்போது நான் மகிழ்ச்சியுடன் திருப்தியாக இருக்கிறேன். எனக்கு கிடைத்த ஆசிர்வாதங்களுக்கு நன்றியுள்ளவளாக உணர்கிறேன். செல்வம் மற்றும் புகழ் போன்றவற்றில் இருந்து விலகிச் செல்கிறேன். இது சில நேரம் பயம் தரலாம். தர்மம் அந்தப் பயத்தை நிறைவானதாக மாற்றும் என்று நம்புகிறேன். மனிதாபிமானம் நிறைந்த பணிகளிலும், எழுதுவதிலும் எனது வாழ்கையை கழிக்க விரும்புகிறேன். என்றாவது ஒரு நாள் நான் ஹாலிவுட்டுக்கு திரும்பலாம்” என்று தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !