முத்தையா இயக்கத்தில் பிரபு, கார்த்திக் மகன்கள்
ADDED : 590 days ago
குட்டிப் புலி, கொம்பன், மருது போன்ற அதிரடியான கிராமத்து படங்களை இயக்கியவர் முத்தையா. கடைசியாக இவரது இயக்கத்தில் வெளிவந்த காதர் பாட்சா என்கிற முத்துராமலிங்கம் படம் தோல்வி அடைந்தது. தற்போது தனது மகனை வைத்து சுள்ளான் சேது என்கிற படத்தை இயக்கி வருகிறார்.
இதைத் தொடர்ந்து நடிகர்கள் விக்ரம் பிரபு, கவுதம் கார்த்திக் ஆகிய இருவரையும் முதன்மை கதாபாத்திரத்தில் வைத்து படம் இயக்கவுள்ளார் முத்தையா. கடந்த 1988ம் ஆண்டில் நடிகர்கள் பிரபு, கார்த்திக் இருவரும் 'அக்னி நட்சத்திரம்' படத்தில் இணைந்து நடித்திருந்தனர். இப்போது இவர்கள் மகன்களான விக்ரம் பிரபு, கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கின்றனர் என்பது திரையுலகில் வியப்பாக பேசுகின்றனர்.