பால சரவணன் ஹீரோவாக நடிக்கும் ‛பேச்சி'- பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட சிவகார்த்திகேயன்!
ADDED : 485 days ago
தமிழ் சினிமாவின் காமெடியன்களான வடிவேலு, சந்தானம், சூரி, சதீஷ் உள்ளிட்ட பலர் ஹீரோக்களாகிவிட்ட நிலையில், தற்போது இன்னொரு காமெடியனான பாலசரவணனும் ‛பேச்சி' என்ற ஒரு படத்தில் நாயகனாக நடித்திருக்கிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக விக்ரம் படத்தில் நடித்த காயத்ரி நடித்துள்ளார். ஹாரர் கதையில் உருவாகியுள்ள இந்த படத்தை ராமச்சந்திரன் இயக்க, ராஜேஷ் முருகேசன் இசையமைத்திருக்கிறார்.
தற்போது இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி இருக்கிறது. இந்த போஸ்டரை நடிகர் சிவகார்த்திகேயன் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அதில், ‛அன்பு தம்பி பாலசரவணன் மற்றும் படக் குழுவினர் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்' என்று தெரிவித்துள்ளார். அந்த போஸ்டரில் இந்த பேச்சி படம் ஜூலை மாதம் திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.