தர்ஷனுக்கு உதவி செய்த நபர் கைது : விஷயம் கேள்விப்பட்ட தந்தை ஹார்ட் அட்டாக்கில் மரணம்
கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக நடித்து வருபவர் தர்ஷன். கடந்த பல வருடங்களில் பல்வேறு விதமான சர்ச்சைகளில் சிக்கி அடிக்கடி தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்து வந்த தர்ஷன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கன்னட படங்களில் நடிக்கவும் தடை விதிக்கப்பட்டார். இந்த நிலையில் தற்போது தனது ரசிகரான ரேணுகா சுவாமி என்பவரை கொலை செய்த வழக்கில் தர்ஷன் மற்றும் அவரது காதலி பவித்ரா கவுடா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தனது காதலி பவித்ரா கவுடா குறித்து அவதூறான கமெண்ட்களை ரேணுகா சுவாமி தொடர்ந்து பதிவிட்டு வந்ததாகவும், அவரது மொபைல் நம்பருக்கு அநாகரீகமான ஆபாசமான செய்திகளை அனுப்பி டார்ச்சர் செய்ததாகவும் கேள்விப்பட்ட தர்ஷன் அவரை கொலை செய்ததாக கூறப்படுகிறது.
இவருக்கு உதவியாக கிட்டத்தட்ட 10 பேர் இந்த கொலை வழக்கில் ஈடுபட்டுள்ளனர். அதில் ரேணுகா சுவாமியை காரில் கடத்தி வந்ததில் உதவியாக இருந்த அனு குமார் என்பவர் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். தனது மகன் இப்படி ஒரு கொலை குற்றத்தில் உடந்தையாக இருந்துள்ளான் என்கிற செய்தியும் அதற்காக கைது செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தியும் கேள்விப்பட்ட அனு குமாரின் தந்தை அந்த அதிர்ச்சியால் ஏற்பட்ட ஹார்ட் அட்டாக்கில் மரணம் அடைந்துள்ளார். இது ஏற்கனவே அதிர்ச்சியில் இருந்த அனு குமாரின் குடும்பத்தில் மீண்டும் ஒரு பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.