திருப்பதியில் நடிகர் அஜித் வழிபாடு
ADDED : 474 days ago
நடிகர் அஜித் தற்போது ‛விடாமுயற்சி' மற்றும் ‛குட் பேட் அக்லி' ஆகிய இரு படங்களில் நடித்து வருகிறார். இவற்றில் மகிழ்திருமேனி இயக்கத்தில் நடித்து வந்த விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி வந்த நிலையில் சில பிரச்னைகளால் படப்பிடப்பு நின்றது. இதனால் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‛குட் பேட் அக்லி' படத்தில் நடித்தார். ஒருகட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் முடிந்துள்ளது.
இதற்கிடையே மீண்டும் விடாமுயற்சி படப்பிடிப்பு அஜர்பைஜானில் அடுத்தவாரம் துவங்க உள்ளது. இதில் பங்கேற்கும் முன்னதாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்தார் அஜித். இது தொடர்பான போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் வைரலாகின. அதேப்போல் அவர் தங்கியிருந்த ஓட்டல் அலுவலர்களிடமும் அவர் போட்டோ எடுத்த வீடியோவும் வைரலானது.