நடிகை அமலா பாலுக்கு ஆண் குழந்தை பிறந்தது!
ADDED : 474 days ago
கடந்த ஆண்டு தேசாய் என்பவரை திருமணம் செய்து கொண்டார் நடிகை அமலா பால். அதையடுத்து கர்ப்பமான அவர் தொடர்ந்து தான் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள், வீடியோக்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு வந்தார் . இந்த நிலையில் கடந்த 11ம் தேதி அமலாபாலுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த தகவலை அவர் தனது இன்ஸ்டாகிராமில் நேற்று தெரிவித்தார். அதோடு அவர் தனது குழந்தைக்கு ‛இலை' என்று பெயர் வைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி குழந்தையுடன் வீடு திரும்பிய போது அவரது குடும்பத்தினர் வீடு முழுக்க பலூன்களால் அலங்காரம் செய்து அவரையும், குழந்தையையும் வரவேற்றுள்ளார்கள். இது குறித்த வீடியோவையும் வெளியிட்டு இருக்கிறார் அமலாபால்.