எதிர்நீச்சல் சீசன் 2 குறித்த ரசிகரின் கேள்விக்கு ஜனனியின் பதில்
                                ADDED :  499 days ago     
                            
                            சின்னத்திரையில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் தொடர் அண்மையில் முடிவுக்கு வந்தது. இதனையடுத்து இந்த சீரியலில் நடித்த நடிகர்கள், ரசிகர்கள் என அனைவருமே சோகத்தில் உள்ளனர். முன்னதாக சுந்தரி சீரியலும் சீக்கிரமாக முடிவுக்கு வந்தது. எனினும், சீசன் 1 முடிந்த கையோடு சீசன் 2 ஒளிபரப்பாகி வருகிறது. அதேபோல, எதிர்நீச்சல் தொடரும் சீசன் 2 விரைவில் வர இருப்பதாகவும் வேறொரு சேனலில் அந்த தொடர் ஒளிபரப்பாகும் எனவும் செய்திகள் வலம் வர தொடங்கியுள்ளது. இந்நிலையில், ரசிகர் ஒருவர் எதிர்நீச்சல் தொடர் சீசன் 2விலும் நீங்களும் சபரியும் ஜோடியாக நடிக்கிறீர்களா? என அந்த தொடரில் ஜனனியாக நடித்த நாயகி மதுமிதாவிடம் கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்துள்ள மதுமிதா, 'இப்போது வரை எதிர்நீச்சல் 2 குறித்து எந்த தகவலும் உறுதி செய்யப்படவில்லை' என கூறியுள்ளார்.