சம்பளத்தை உயர்த்திய பூஜா ஹெக்டே
ADDED : 503 days ago
நடிகை பூஜா ஹெக்டே தொடர்ந்து ஹிந்தி, தெலுங்கு மொழி படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். தமிழில் கடைசியாக 'பீஸ்ட்' படத்தில் நடித்திருந்தார். இதைத்தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் 44வது படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார் என சமீபத்தில் அறிவித்தனர். 2டி மற்றும் ஸ்டோன் பென்ச் என இரு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கின்றார்.
தற்போது இதன் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த வாரத்தில் அந்தமானில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பூஜா ஹெக்டே இதுவரை ஒரு படத்திற்கு ரூ. 3 கோடி சம்பள தொகையாக பெற்று வந்தவர், இப்போது சூர்யா 44வது படத்தில் நடிக்க ரூ. 4 கோடி சம்பளமாக நிர்ணயம் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.