உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இந்த நூற்றாண்டின் சிறந்த 25 படங்கள் பட்டியலில் ரஜினியின் காலா

இந்த நூற்றாண்டின் சிறந்த 25 படங்கள் பட்டியலில் ரஜினியின் காலா

பிரிட்டிஷ் பிலிம் இன்ஸ்டிடியூட்டின் மாத இதழான சைட் அண்ட் சவுண்ட் தற்போது இந்த நூற்றாண்டின் சிறந்த 25 படங்கள் அடங்கிய பட்டியலை வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில், ஓல்ட் பாய், ஹிஸ்டரி ஆப் வயலன்ஸ், பார்பரா போன்ற படங்கள் வரிசையில் ரஜினியின் காலா படமும் இடம்பெற்றுள்ளது. இந்த படத்தை பா. ரஞ்சித் இயக்கி இருந்தார். கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான காலா படத்தில் ரஜினியுடன் நானா படேகர், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்கள். மும்பையில் உள்ள தாராவியில் வாழும் தமிழ் மக்களின் பிரச்சினைகளை மையமாகக் கொண்ட கதையில் இந்த படம் உருவானது. இப்படம் தமிழக ரசிகர்களுக்கிடையே பெரிய அளவில் வரவேற்பு பெறாத போதும், தற்போது இந்த நூற்றாண்டின் சிறந்த 25 படங்கள் அடங்கிய பட்டியலில் இடம் பிடித்திருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !