உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சூரியின் புதிய படம் பற்றிய அப்டேட்

சூரியின் புதிய படம் பற்றிய அப்டேட்

நகைச்சுவை நடிகர் சூரி விடுதலை படத்தின் வெற்றிக்குப் பிறகு கதையின் நாயகனாக தொடர்ந்து படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். சமீபத்தில் அவர் முதன்மை வேடத்தில் நடித்த 'கருடன்' படமும் வெற்றி பெற்றுள்ளது. தற்போது விடுதலை 2ம் பாகத்தில் நடித்து வருகிறார். இதுதவிர கொட்டுக்காளி என்ற படமும் அடுத்து வெளியாக உள்ளது. இந்த படங்களுக்கு பின் ‛விலங்கு' வெப் தொடரை இயக்கிய பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் சூரி நாயகனாக நடிக்கவுள்ளார். இதற்கான முதற்கட்ட பேச்சுவார்த்தை நிறைவு பெற்றுள்ளது. இந்த படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கலாம் என கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !