‛மாசாணி அம்மன்' ஆக த்ரிஷா
ADDED : 500 days ago
நடிகர் மற்றும் இயக்குனரான ஆர்.ஜே.பாலாஜி இயக்கம், நடிப்பில் கடந்த 2020ம் ஆண்டில் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளிவந்த திரைப்படம் 'மூக்குத்தி அம்மன்'. இதில் மூக்குத்தி அம்மன் வேடத்தில் நயன்தாரா நடித்திருந்தார். அதன்பின் தொடர்ச்சியாக ஹீரோவாக நடித்து வருகிறார் பாலாஜி.
மூக்குத்தி அம்மன் படத்தை தொடர்ந்து மீண்டும் அம்மன் கதை களத்தை மையப்படுத்தி ஒரு படத்தை இயக்க உள்ளார் பாலாஜி. கடந்த சில மாதங்களாக இதற்கான பணி நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்திற்கு மாசாணி அம்மன் என பெயரிட்டு இருப்பதாகவும், இதில் முதன்மை வேடத்தில் த்ரிஷா நடிப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கிறார்கள்.