உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கள்ளக்குறிச்சி சென்ற விஜய் : பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல்

கள்ளக்குறிச்சி சென்ற விஜய் : பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல்

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 40க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில் சிகிச்சையில் உள்ளவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார் நடிகரும், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவருமான விஜய்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 42 பேர் பலியாகினர். நூற்றுக்கும் மேற்பட்டோர் தொடர் சிகிச்சையில் உள்ளனர். இவர்களில் சிலர் கவலைக்கிடமாக உள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக தமிழக வெற்றிக் கழக தலைவர், நடிகர் விஜய் வெளியிட்ட அறிக்கையில், ‛‛உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதோடு, உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் முழு உடல்நலம் பெற இறைவனைப் பிரார்த்திக்கின்றேன். கடந்த ஆண்டு இதே நிகழ்வு காரணமாகப் பல உயிர்களை இழந்த துயரத்தில் இருந்து இன்னும் முழுமையாக மீளாத நிலையில், மீண்டும் இப்படியொரு சம்பவம் நிகழ்ந்திருப்பது, அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தையே காட்டுகிறது'' என குறிப்பிட்டார்.

இந்நிலையில் கள்ளக்குறிச்சிக்கு வருகை தந்த நடிகர் விஜய், கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அதோடு மருத்துவர்களிடம் அவர்களுக்கு என்ன மாதிரியான சிகிச்சை அளிக்கப்படுகிறது என்பது குறித்து கேட்டறிந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !