அஜித்தின் குட் பேட் அக்லி படத்தில் இணைந்த ரெடின் கிங்ஸ்லி
ADDED : 467 days ago
அஜித்குமார் நடித்து வரும் படம் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு மீண்டும் அஜர்பைஜானில் நடைபெற்று வருகிறது. இன்னும் ஒரு மாதத்தோடு இப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து விடும் என்றும், தீபாவளிக்கு படம் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் ஏற்கனவே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கும் குட் பேட் அக்லி படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பில் நடித்துள்ள அஜித், விடாமுயற்சி படப்பிடிப்பை முடித்ததும் மீண்டும் அப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை தொடரப் போகிறார். இந்நிலையில் குட் பேட் அக்லி படத்தில் ரெடின் கிங்ஸ்லி காமெடி வேடத்தில் நடிக்க கமிட் ஆகியிருக்கிறார். இப்படத்தில் படம் முழுக்க அஜித்துடன் வரும் மெயின் காமெடியனாக ரெடின் கிங்ஸ்லி நடிப்பதாகவும் கூறுகிறார்கள்.