20 ஆண்டுகள் கழித்து சீரியல்களில் ரீ-என்ட்ரி கொடுக்கும் அஜய் கபூர் மனைவி
ADDED : 464 days ago
கோலங்கள் தொடரில் ஆதி என்கிற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து கலக்கியவர் நடிகர் அஜய் கபூர். இவரது நடிப்பு இன்றளவும் பலராலும் வியந்து பாராட்டப்படுகிறது. பலரும் இவரை இப்போதும் கம்பேக் கொடுக்க சொல்லி கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் கம்பேக் கொடுத்தது என்னவோ அவரது மனைவி நிஷா கபூர் தான். அஜய் கபூரின் மனைவி நிஷா கபூரும் சீரியல் நடிகை தான். 20 வருடங்களுக்கு முன் ஒளிபரப்பான ருத்ரவீணை தொடரில் இவர் நடித்துள்ளார். அவர் தற்போது மல்லி தொடரின் முலம் சீரியலில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். நிஷா கபூர் மல்லி தொடரில் மிக முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.