குக் வித் கோமாளியில் எலிமினேட் ஆன வசந்த் வசி
ADDED : 474 days ago
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்து பிரபலமாகி வரும் வசந்த் வசி, குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் என்ட்ரி கொடுத்து அசத்தி வந்தார். இவருக்கு ரசிகர்களின் ஆதரவும் நிறையவே கிடைத்து வருகிறது. இந்நிலையில், கடந்த வாரம் நடைபெற்ற போட்டியில் அக்ஷய் கமல், பூஜாவுடன் வசந்த் வசியும் எலிமினேஷனுக்கு தேர்வு செய்யப்பட்டார். இந்த மூவரில் யார் இம்முறை வெளியேற போகிறார்கள் என பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில், வசந்த் வசி எலிமினேட் ஆகியுள்ளார். இதனால் மனமுடைந்த வசந்த் வசி மிகவும் மனம் வருந்தி கண் கலங்கி பேசியுள்ளார். இதனையடுத்து ரசிகர்கள் வசந்த் வசிக்கு ஆதரவாக கமெண்டுகளில் தங்கள் ஆதரவுகளை தெரிவித்து வருகின்றனர்.