உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சூப்பர் சிங்கர் 10 இறுதிப்போட்டியில் வென்றது யார்?

சூப்பர் சிங்கர் 10 இறுதிப்போட்டியில் வென்றது யார்?

விஜய் டிவியின் வெற்றிகரமான நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி, 10 வது சீசனில் அடியெடுத்து வைத்து ஒளிபரப்பாகி வந்தது. அந்நிகழ்ச்சியின் இறுதிப்போட்டியானது நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் கடந்து ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றுள்ளது. இதில் விக்னேஷ், ஜீவிதா, ஜான் ஜெரோம், வைஷ்ணவி, ஸ்ரீநிதி ஆகியோர் கலந்து கொண்டு பாடினர். இந்த போட்டியின் இறுதியில் ஜான் ஜெரோம் முதலிடத்தை பிடித்தார். அவருக்கு 60 லட்சம் ரூபாய் வீடு பரிசாக அளிக்கப்பட்டது. இரண்டாவது இடத்தை பிடித்த ஜீவிதாவுக்கு ரூபாய் 10 லட்சம் பரிசுதொகையும், மூன்றாவது இடத்தை பிடித்த வைஷ்ணவிக்கு 5 லட்ச ரூபாயும், நான்காவது இடத்தை பிடித்த ஸ்ரீநிதி மற்றும் ஜந்தாவது இடத்தை பிடித்த விக்னேஷ் ஆகியோருக்கு தலா 3 லட்ச ரூபாயும் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !