ரஜினிக்கு லுக் டெஸ்ட் ; ஜூலையில் கூலி படப்பிடிப்பு : லோகேஷ் அப்டேட்
ADDED : 488 days ago
வேட்டையன் படத்தை முடித்துவிட்ட ரஜினி அடுத்து லோகேஷ் கனகராஜின் படத்தில் நடிக்க உள்ளார். ரஜினியின் 171வது படமாக உருவாகும் இதற்கு ‛கூலி' என பெயரிடப்பட்டு, சில மாதங்களுக்கு முன் அறிவிப்பு வந்தது. அனிருத் இசையமைக்கிறார். அதோடு படத்தின் அறிமுக வீடியோவும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.
இதன் படப்பிடிப்பு இந்த மாதமே துவங்க வேண்டியது. ஆனால் திரைக்கதை பணிகள் முடியாததால் தாமதம் ஆகி வந்தது. இதனால் தற்போது ஓய்வில் இருந்து வருகிறார் ரஜினி. இந்நிலையில் கூலி படம் தொடர்பாக எக்ஸ் தளத்தில் ஒரு அப்டேட் கொடுத்துள்ளார் லோகேஷ்.
அதில் ரஜினி உடன் இருக்கும் போட்டோவை பகிர்ந்து கூலிக்காக லுக் டெஸ்ட். ஜூலை முதல் ஆரம்பம் என குறிப்பிட்டுள்ளார்.