ஆஸ்கர் அகாடமியில் இந்தியர்களின் ஆதிக்கம்
ஏ.ஆர்.ரஹ்மான் ஆஸ்கர் விருதை வென்ற பிறகு ஆஸ்கரின் கவனம் இந்திய சினிமாவின் பக்கம் திரும்பியது. கடந்த சில ஆண்டுகளாக இந்திய கலைஞர்களும் ஆஸ்கர் விருது பெற்று வருகின்றனர். இந்த நிலையில் ஆஸ்கர் விருதுகளை தீர்மானிக்கும் ஆஸ்கர் அகாடமி கமிட்டியில் தற்போது 487 புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். அதில் இந்திய கலைஞர்களும் இடம் பெற்றுள்ளனர்.
புதிய உறுப்பினர் பட்டியலில் இயக்குனர் ராஜமவுலி, நடிகை ஷபனா ஆஸ்மி, 'ஆர்ஆர்ஆர்' படத்தில் இடம்பெற்ற 'நாட்டு நாட்டு' பாடலுக்கு நடனம் அமைத்த பிரேம் ரஷீத், ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் மற்றும் ராஜமவுலி மனைவி ரமா, ரிமா தாஸ் உள்ளிட்ட பலர் இடம்பெற்று உள்ளனர். ஆஸ்கர் விருது வென்ற 19 பேரும், ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட 71 பேரும் புதிய உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டு உள்ளனர்.
புதிய உறுப்பினர்களையும் சேர்த்து ஆஸ்கார் அகாடமியில் இடம்பெற்றுள்ளவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 910 ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்கா மற்றும் 56 நாடுகளை சேர்ந்தவர்கள் ஆஸ்கார் அகாடமியில் உறுப்பினர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.