நடனப்பள்ளி திறந்த ஹரிப்பிரியா
ADDED : 468 days ago
பிரபல சின்னத்திரை நடிகையான ஹரிப்பிரியா நீண்டநாள் இடைவேளைக்கு பிறகு எதிர்நீச்சல் சீரியல் மூலம் கம்பேக் கொடுத்தார். கணவரை விவாகரத்து செய்து மகனுடன் தனித்து வாழ்ந்து வரும் ஹரிப்பிரியாவுக்கு எதிர்நீச்சல் தொடர் மிகப்பெரிய உத்வேகத்தை அளித்தது. இந்நிலையில், அந்த தொடர் அண்மையில் முடிவுக்கு வந்துவிட்டது. இதனையடுத்து ஹரிப்பிரியா என்ன செய்ய போகிறார் என ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து வந்த நிலையில் சட்டென பரதநாட்டியத்திற்கான நடனப்பள்ளி ஒன்றை துவங்கியுள்ளார். காளிகல்பா என்ற இவரது நடனப்பள்ளியில் ஆன்லைன் மற்றும் ஆப்லைனில் நடனம் சொல்லித்தரப்படும் என அறிவித்துள்ளார். மேலும் நடனப்பள்ளி திறப்பதை தனது நீண்டநாள் கனவு என பதிவிட்டுள்ள ஹரிப்பிரியாவுக்கு ரசிகர்கள், சக நண்பர்கள் என பலரும் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.