உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இந்தியன்-2வில் கமலுடன் நடித்த அனுபவம்! - எஸ்.ஜே.சூர்யா தகவல்

இந்தியன்-2வில் கமலுடன் நடித்த அனுபவம்! - எஸ்.ஜே.சூர்யா தகவல்


ஷங்கர் இயக்கத்தில் கமல், சித்தார்த், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள படம் இந்தியன்- 2. வருகிற ஜூலை 12ம் தேதி திரைக்கு வரும் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதோடு, கடைசியாக ஷங்கர் இயக்கிய 2.0 படத்திற்கு பிறகு 6 ஆண்டுகள் கழித்து அவர் இயக்கத்தில் இந்த படம் திரைக்கு வருகிறது. கமல்ஹாசன் உடனான கூட்டணி என்பதால் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தற்போது புரமோஷனுக்காக இந்தியன்-2 படக்குழு மலேசியா சென்றுள்ளது.

இந்த நிலையில் மலேசியாவில் நடைபெற்ற இந்தியன்-2 புரமோசனில் எஸ்.ஜே.சூர்யா சொன்ன ஒரு தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதில், இந்தியன்-2 படத்தில் சில காட்சிகளில் மட்டுமே நான் நடித்து இருக்கிறேன். அதேசமயம் இந்தியன்-3யில் எனக்கும், கமல் சாருக்கும் ஒரு சூப்பர் காம்பினேஷன் காட்சிகள் உள்ளன. அதில் ஒரு சீனில், என்னைப்பார்த்து இங்கே வாடா என்று அவர் கூப்பிட வேண்டும். அந்த சீனில் ஒரு புதுமாதிரியாக சொடக்கு போட்டு அவர் கூப்பிடுவார். அந்த ஷாட் அசத்தலாக இருக்கும். அவர் எப்படி சொடக்கு போட்டு என்னை அழைத்தார் என்பதை பார்க்க இந்தியன்-3 படம் வரும் வரை காத்திருங்கள் என்று கூறியுள்ளார் எஸ்.ஜே.சூர்யா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !