டைனோசர்ஸ் பட இயக்குனர் உடன் இணையும் சிம்பு!
ADDED : 524 days ago
நடிகர் சிலம்பரசன் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் உடன் இணைந்து ' தக் லைப்' படத்தில் நடித்து வருகின்றார். இதைத்தொடர்ந்து இப்போது புதிய படத்தில் நடிக்க சிம்பு ஆர்வமாக இளம் இயக்குனர்களை அழைத்து கதை கேட்டு வருகின்றார்.
இந்த வரிசையில் ஏற்கனவே டைனோசர்ஸ் பட இயக்குனர் எம். ஆர். மாதவனிடம் சிம்பு கதை கேட்டிருந்தார் என தகவல் வெளியானது. இப்போது இந்த கதையில் சிம்பு நடிக்கவுள்ளார். இதற்கான அடுத்தக்கட்ட விவாதங்கள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.