தேவி ஸ்ரீ பிரசாதிற்கு ஜோடியாகும் நடிகை யார் தெரியுமா?
ADDED : 32 minutes ago
தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னனி இசையமைப்பாளர் ஆக வலம் வருபவர் தேவி ஸ்ரீ பிரசாத். தெலுங்கில் இயக்குனர் வேணு ஏழ்டாண்டி இயக்கத்தில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா நிறுவனத்தின் தயாரிப்பில் ' எல்லம்மா' எனும் படம் உருவாகவுள்ளது. இந்த படத்தின் முன் தயாரிப்பு பணிகள் கடந்த சில வருடங்களாக நடைபெற்று வருகிறது.
சமீபத்தில் இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்க நானி, நிதின், சர்வானந்த் போன்ற நடிகர்கள் மறுத்ததால் இந்த படத்தின் மூலம் தேவி ஸ்ரீ பிரசாத் கதாநாயகனாக அறிமுகமாகிறார் என தகவல் வெளியானது.
இந்த நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தம் ஆகியுள்ளார் என்கிறார்கள். இவர் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் பிஸியாக படங்களில் நடித்து வந்தாலும் தேவி ஸ்ரீ பிரசாத் உடனுள்ள நட்பிற்காக கீர்த்தி சுரேஷ் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.